சிறப்பு ரெயில்கள்
பண்டிகை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் வழக்கமாக முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும். நேற்று முன்தினம் தீபாவளிக்கான சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. சென்னை எழும்பூர்-கோவை, திருச்சி-சந்திராகாச்சி, நாகர்கோவில்-பாட்னா மற்றும் சென்னை-நாகர்கோவில் ஆகிய வழித்தடங்கள் இடையே இருமார்க்கமாகவும் சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.
காலி இடங்கள்
9-ந் தேதி காலை 10.15 மணிக்கு எழும்பூர்-கோவை சிறப்பு ரெயிலில் (வண்டி எண்:06111) படுக்கை வசதியில் 172 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. 40 இடங்களும் காலியாக உள்ளன. மறுமார்க்கத்தில் இந்த ரெயிலில் (06112) படுக்கை வசதி 95 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. 37 இடங்களும் காலியாக உள்ளன.
9-ந் தேதி பாட்னா-நாகர்கோவில் சிறப்பு ரெயிலின் (06115) படுக்கை வசதி 300 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. 22 இடங்களும் காலியாக உள்ளன. 7-ந் தேதி நாகர்கோவில்-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயிலில் (06117) படுக்கை வசதி 476 இடங்களும், 3-ம் வகுப்பு ஏ.சி. 86 இடங்களும் காலியாக உள்ளன. மற்ற சிறப்பு ரெயில்களிலும் ஏராளமான காலியிடங்கள் உள்ளன.
பயணிகள் அறியவில்லை
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தீபாவளி சிறப்பு ரெயில்கள் குறித்து பயணிகள் இன்னும் அறியவில்லை என்று கருதுகிறோம். பண்டிகை காலத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் தீபாவளி ரெயில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவின் தொடக்க நாளிலேயே பயணிகள் ஒருசிலரே வந்திருந்தனர். அடுத்த நாட்களில் பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.








