மின்வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை சுமார் 68 ஆயிரம் மட்டுமே. இது ஒவ்வொரு மாதமும் குறைந்து கொண்டே போகிறது.
சென்னை மின் விநியோக வட்டத்தில், வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட களப்பணியாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 196. அதில் காலி பணி இடங்கள் 1,000 என்று வாரியத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
சென்னை, மதுரை, விழுப்புரம், நெல்லை, திருச்சி என 5 மண்டலங்களோடு பொது கட்டுமான வட்டம், தலைமை அலுவலகம், அனல்மின் நிலையங்கள், நீர் மின்நிலையங்கள் மற்றும் ஏனைய மின் உற்பத்தி பிரிவுகள் என மொத்தம் 115 தலைமை அலுவலகங்களிலும் உள்ள காலி பணி இடங்கள் வரலாறு காணாத அளவுக்கு மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.








