இந்தியக் கடற்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ். கொச்சி
போர்க் கப்பலில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பிரம்மோஸ்
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
அரபிக் கடலில் நிர்ணயிக்கப்பட்ட 290 கி.மீ. தொலைவை கடந்து சென்ற அந்த ஏவுகணை, ஏற்கெனவே அழிக்கும் நோக்கத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "ஆலெஃபி' கப்பலை வெற்றிகரமாகத் தாக்கியது.
இதற்கு முன்பாக ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளில்
அடுத்தகட்ட முன்னேற்றமாக, புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ். கொச்சி
போர்க்கப்பலில் இருந்தும் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக
நடத்தப்பட்டுள்ளது.அரபிக் கடலில் நிர்ணயிக்கப்பட்ட 290 கி.மீ. தொலைவை கடந்து சென்ற அந்த ஏவுகணை, ஏற்கெனவே அழிக்கும் நோக்கத்துடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "ஆலெஃபி' கப்பலை வெற்றிகரமாகத் தாக்கியது.
இதற்கு முன்பாக ஐ.என்.எஸ். கொல்கத்தா போர்க்கப்பலில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் நடத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.
இந்தக் கப்பல் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். சரியாக 7,500 டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். கொச்சி போர்க்கப்பல், ஒரே நேரத்தில் 16 பிரம்மோஸ் ஏவுகணைகளை சுமந்து செல்லக் கூடிய வல்லமை பொருந்தியதாகும். அத்துடன், செங்குத்தான 8 ஏவுதளங்களும், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் கருவிகளும் இந்தக் கப்பலில் இடம்பெற்றுள்ளன.







