தமிழகத்தில் பணியாற்றுவதற்கு உரிமம் பெற்ற மருத்துவர்கள் அனைவருக்கும்
அதிநவீன ("ஸ்மார்ட் போர்டு') பெயர்ப் பலகையை வழங்க தமிழ்நாடு மருத்துவ
கவுன்சில் தீர்மானித்துள்ளது.போலி மருத்துவர்களை பொதுமக்களே எளிதில் கண்டறியும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது
குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன்,
துணைத் தலைவர் மருத்துவர் குமுதா லிங்கராஜ் ஆகியோர் சென்னையில்
செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:தமிழ்நாடு, புதுச்சேரியைச்
சேர்ந்த ஒரு லட்சத்து 13,823 மருத்துவர்கள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில்
பதிவு செய்து, பணியாற்ற உரிமம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு மருத்துவக்
கவுன்சிலில் பதிவு செய்த டாக்டர்கள் மட்டுமே தமிழகத்தில் பணியாற்ற தகுதி
பெற்றவர்கள்.
இந்த நிலையில், பதிவு செய்த அனைத்து மருத்துவர்களுக்கும்
"ஸ்மார்ட் போர்டு' என்று அழைக்கப்படும் அதிநவீன பெயர்ப்பலகை வழங்கத்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்தப் பெயர்ப் பலகையில் மருத்துவரின் பெயர், அவரது தபால் கார்டு அளவிலான புகைப்படம், அவரது படிப்புத் தகுதி, பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும் அந்த பெயர்ப்பலகையில் ணத இஞஈஉ இடம் பெற்றிருக்கும்.
செல்பேசி மூலம்: இந்த பெயர்ப்பலகையை அந்தந்த மருத்துவர்கள் தங்கள் மருந்தகங்களில் பொருத்தியிருக்க வேண்டும். நோயாளிகள் "ஸ்மார்ட்போனில்' பெயர்ப்பலகையில் உள்ள ணத குறியீட்டை ஸ்கேன் செய்தால், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் விவரங்கள் தெரிந்துவிடும்.
ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண செல்லிடப்பேசி வைத்திருப்பவர்கள், பசஙஇதஉஎசஞ என்று டைப் செய்து பெயர்ப்பலகையில் இருக்கும் பதிவு எண்ணையும் டைப் செய்து 56767 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை அந்த பதிவு எண் போலியாக இருந்தால் ஐசயஅகஐஈ என்று பதில் வரும்.
இதன் மூலம் பொதுமக்கள் மருந்தகங்கள், கிளினிக்குகளுக்குள் நுழையும் முன்பே அந்த மருத்துவர் தகுதியானவரா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் தமிழகத்தில் போலி மருத்துவர்களை எளிதில் கண்டறியவும் வழிவகுக்கும்.
இன்னும் 3 மாத காலத்துக்குள் பதிவு செய்திருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் படிப்படியாக இந்தப் பெயர்ப்பலகை வழங்கப்படும். 2016-ஆம் ஆண்டிலிருந்து புதிதாக பதிவு செய்யும் மருத்துவர்களுக்கு இலவசமாக இந்தப் பலகை வழங்கப்படும்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில்தான் "ஸ்மார்ட் போர்டு' பெயர்ப்பலகை முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.







