மாணவர்களுக்கு
மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான நகல்களை வழங்குவதற்கான முகாம் அனைத்து கல்லூரிகளிலும் நேற்று தொடங்கியது.
ஒரு வாரத்தில் சான்றிதழ்
இந்த முகாம் வரும் 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடக்கிறது. சான்றிதழ்களை இழந்தவர்கள் இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம். அரசு, அரசு உதவி பெரும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகங்களும் முகாம்களை நடத்தி சாதி சான்றிதழ் போன்றவற்றையும் வழங்குகிறது. விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு தேவையான கல்லூரியில் வழங்க கூடிய சான்றிதழ்கள் உடனுக்குடனும், பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் ஒரு வார காலத்திலும் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரி முதல்வர் ஆர்.அக்தர்பேகம் கூறியதாவது:-
குழு அமைப்பு
மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ் (டி.சி.), அடையாள அட்டை, தேர்வுக்கான நுழைவு சீட்டு, பஸ் பாஸ் போன்றவற்றை கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். சான்றிதழ் நகல் வழங்குவதற்காக பேராசிரியர்கள் பாக்கியரதி (இசைதுறை தலைவர்), பி.குழல்மொழியாள் (ஆங்கிலத்துறை தலைவர்) பானுமதி (தாவரவியல் துறை தலைவர்), கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் திலகவதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாணவிகளிடம் இருந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.
எங்கள் கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்லூரி என்பதால் மதிப்பெண் சான்றிதழ், அடையாள அட்டை, தேர்வு நுழைவுசீட்டு போன்றவற்றை நகல் எடுத்து உடனுக்குடன் வழங்கி வருகிறோம். பல்கலைக்கழக சான்றிதழ் தேவைப்படுபவர்களுக்கு, மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி நகல் சான்றிதழ் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சாதி சான்றிதழ் தாசில்தார் அலுவலகத்திலும், பஸ் பாஸ் மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்திலும் பெற்றுத்தருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.








