கல்லூரி பேராசிரியர் பதவிக்கான, 'நெட்' தகுதி தேர்வு, நாடு முழுவதும்
தெடங்கி நடைபெறுகிறது. தமிழகத்தில், 50 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுத
உள்ளனர். கல்லூரி மற்றும் பல்கலைகளில் பேராசிரியராக சேர, 'நெட்' தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
நாடு
முழுவதும், 89 இடங்களில் உள்ள தேர்வு மையங்களில், 10 லட்சம் பேர் எழுத
உள்ளனர். தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சியில் உள்ள
தேர்வு மையங்களில் 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்; மூன்று தாள்களுக்கு
விடையளிக்க வேண்டும். தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை
www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம்செய்யலாம்.