டி.என்.பி.எஸ்.சி யின் தாமதமும்
தேர்வர்களின் சகிப்புத்தன்மையும்
சமீபத்தில் நடந்த குருப் ஒன்றின் முதல்
நிலைத் தேர்வுகளின் முடிவுகளை நான்கு மாதங்களுக்குள்
வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய பொருளாதார மந்த நிலையில் தமிழக இளைஞர்களின்
அதிகபட்ச கனவு ஒரு அரசு வேலை கிடைத்துவிடாதா என்பதாக மட்டுமே இருக்க முடியும்.ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டு மக்கள் எவ்வாறு தமது நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்பதைப்
பொருத்திருக்கிறது.மனிதர்களிடையே வேகம் என்பது பின்னி
பிணைந்தது.ஊடகங்களிடையே செய்திகளை முந்தி தருவது சாதனை.எதிர்காலத்தை முந்தி
சொல்வது ஜோதிடம்.குழந்தை பாலினம் பற்றி முன்பே அறிந்து கொள்ள ஸ்கேன்.இன்று
மனிதர்கள் ஒலியை விட ஒளியை விரும்புவது அதன் வேகத்தினால் தான்.
இந்த நீதிமன்ற
உத்தரவை இரண்டு விதமாக பார்க்கலாம்.
- · குடும்ப சூழ்நிலை காரணமாக சமுதாய அழுத்தத்தின் விளைவாக வரும் மன அழுத்தத்தின் விரக்தியில் திறமையான தேர்வர்கள் வேறு வழி இல்லாமல் நீதிமன்ற படிகளை நாடுவதும்
- நிர்வாகத் துறையின் வரம்பு எல்லைகளில் கடந்த சில வருடங்களில் நீதித்துறை அத்துமீறி நுழைந்து உத்தரவிட்டு நிர்வாக இயந்திரத்தை சேர்த்தே சுழற்றுவதும்
இஸ்திரதன்மை
இல்லாத தனியார் வேலையை சமுதாயம் இன்று துச்சமாக மதிப்பது அரசு வேலைக்கு பல
இளைஞர்களை படையெடுக்க வைத்திருக்கிறது. அணிவதற்கு சில ஆடையோடும் கையில் கொஞ்சம்
பணமொடும் சென்னைக்கு தங்கள் அரசு வேலை
கனவோடு பயணிக்க தொடங்கி தங்கள் இலக்கை அடைவதற்குள் தேர்வர்கள் படும் பாடை ஒரு
வாழ்க்கை பாடமாகவோ /திரைப்படமாகவோ எடுக்கலாம்.அவ்வளவு சோதனைகள் இருக்கிறது. சரி
டி.என்.பி.எஸ்.சி யின் தாமத செயல்பாடுகள் ஏற்புடையது தானா ?
சற்றேழு ஒப்ப 300 பணியாளர்கள் வைத்திருக்கும்
டி.என்.பி.எஸ்.சி இந்தியாவின் முன்னோடி தேர்வாணையம். இந்தியாவில் எந்த
தேர்வாணையமும் செய்ய முடியாத பணிகளை செய்து வருகிறது. ஆண்டுக்கு 20 க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தி 10,000
-15000 பணியிடங்களுக்கு(குறிப்பு:இந்தியாவில்
எந்த மாநில தேர்வாணையமும் இவ்வளவு
பணியிடங்களுக்கு நடத்துவதில்லை) 40-50 லட்ச விண்ணப்பங்கள் பெற்று திறம்பட செயலாற்றி கிராமப்புற இளைஞர்கள் /நகர
இளைஞர்கள் என்ற வித்தியாசம் பாராமல் அவர்களின் வாழ்க்கை முகத்தை மாற்றி இருக்கிறது,இருந்தும்
டி.என்.பி.எஸ்.சி மீது தேர்வர்களுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் இருப்பதில்லை.காரணம் தாமதமான
தேர்வு முடிவுகள்/கலந்தாய்வு/குழப்பமான நடைமுறைகள்.
டி.என்.பி.எஸ்.சி தாமதம் குறை சொல்வதற்கு முன்பு
- · நேரடித் தேர்வுகள் மட்டுமல்ல துறைத்தேர்வுகள் போன்றவற்றையும் நடத்துவது டி.என்.பி.எஸ் சி தான்
- · யு.பி.எஸ்.சி போன்று குறிப்பிட்ட சில தேர்வுகளை போன்று நடத்துவதில்லை .டி.என்.பி.எஸ்.சி
- · வெறும் 300 பணியாளர்களை கொண்டு இவ்வளவு தேர்வுகளை நடத்துவதே மிகப்பெரும் சாதனை
- · முடிவுகள் வெளியாக ஒரு வருடம் ஆகிறது என்று நாம் யோசிக்கும் போது மேற்கு வங்கம்/பீகார்/யு.பி போன்ற தேர்வாணையம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் கழித்து கூட தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றன
- · மத்திய அரசு போன்று General/OBC/SC/ST/PH போன்ற இட ஒதுக்கீடு படி தரப்படுத்துவது எளிது.ஆனால் இங்கு General Turn/General Turn-Women/BC-General/BC-Women/BC(destitute widow)/BC-Tamil Medium இதே போன்று MBC/SC/ST/ST-A/BC Muslim என பல் உட்கூறுகள் படி தரப்படுத்துவது அவ்வளவு எளிதா ? தலையே சுற்றுகிறது
- பற்றாக்குறைக்கு நீதி மன்ற வழக்குகள்/தகவல் அறியும் உரிமை சட்ட தபால் என டி.என்.பி.எஸ்.சி யின் அன்றாட பணிகளை மூச்சு திணற வைக்கிறது
ஒரு தேர்வு
நடந்து முடிந்து தமிழகம் முழுவதும் அனைத்து விடைத்தாள்களும் சென்னை வந்து சேரவே
பதினைந்து நாட்களாகி விடும். உத்தேச விடைகள் வெளியிட்டு அதை தேர்வுக் குழு
ஒப்புதல் வழங்கவே ஒரு வாரம் ஆகி விடும். விடைத்தாள் வேகமாக திருத்தப்பட்டாலும் அதை
ஒழுங்காக தரவரிசைப் படுத்தி பல பிரிவுகளுக்கு அனுப்பி கையெழுத்தாக எவ்வளவு நாள்
ஆகும் ??? யோசியுங்கள். தவறு இருந்தால் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
பாயும் என்ற பயத்திலே பலர் மெதுவாகவும் கவனமாகவும் தான் கையாளுகின்றனர். ஒரு தர
வரிசை தவறு இருந்தால் ஒட்டு மொத்த முடிவுகளுமே மாறும். (15 லட்ச தேர்வர்கள் என்பது குறைவான எண்ணிக்கையா?)தேர்வு
முடிவுகள் இறுதி ஆகும் வரை உள்ள படிநிலைகள் பல. எனவே குறைந்தது மூன்று முதல் நான்கு
மாதம் ஆகும் எந்த தேர்வானாலும்
·
பல
பணியாளர்கள் இரவு பத்து மணி ஆனாலும் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் வேலை செய்வதை
காண முடியும். ஒரு தேர்வு முடிவுகளை வெளியிடுவது என்பது ஒரு பிரசவக்காலம் போன்றது
தான்.
· என்ன செய்ய வேண்டும் ???
தேர்வர்களின் கொந்தளிப்பும் மன நிலையும் எவராலும் அறிந்து கொள்ள முடியாது
ஒரு சக தேர்வரை தவிர. நியாமானது தான். என்ன செய்வது ? இந்த தாமதம் தேர்வர்களின்
சகிப்புத்தன்மையை சோதிக்கும் படியான ஒரு தேர்வு நிலை தான்.நாளை அரசு அலுவலர் ஆன
பிறகு நமக்கு தேவையான பண்பே சகிப்புத்தன்மையும் பொறுமையும் தான்.அதை இங்கே
கற்றுக்கொள்ள வேண்டும்.
கூடுதலாக நூறு அல்லது 150 பணியாளர்களுக்கு அரசு ஒப்புதல் அளித்து தேர்வாணையத்தின் வேகத்தை கூட்ட
வேண்டும். மேலும் வெளிப்படைத்தன்மையை கூட்ட வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற
தலையீடை தடுக்க முடியாது.மேலும் தேர்வர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
உடனடியாக கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் அரசு பணிக்கு வருவது என்பது மூன்று மணி
நேர ஷங்கர் திரைப்படம் அல்ல.