New year History: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


New year History:

ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்!
ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள இந்த ஆங்கில ஆண்டு முறை கிறிஸ்தவ காலண்டர் அல்ல. மாறாக இயேசுவின் பிறப்பிற்கு முன்னரே உள்ள காலண்டர் முறை ஆகும்.
இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும்.
ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார்.
பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம்.
மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது.
ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர்.இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று 

மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

ஜூன் :ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது.

ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது.

மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். 

ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம். இது ஒரு புறமிருக்க…
இந்தக் காலண்டரின் மாதங்களின் நாள்களை முடிவு செய்ததிலும் ‘ஒரு முட்டாள்தனமான’ வரலாறு உள்ளது..
முதலில் மாதங்களின் நாள்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை 30 நாள்களும் 31 நாள்களும் மாறி மாறி வந்தன.
அதாவது ஜனவரி 31 நாள்கள், பிப்ரவரி 30 நாள்கள், மார்ச் 31 . . .
இதனை ஜூலியஸ் ஸீஸர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாளை பிடுங்கி தன் பெயரில் உள்ள மாதத்திற்கு; அதாவது ஜூலை மாதத்திற்குச் சேர்த்தார். அதனால் 30 நாளாக அதுவரை இருந்த ஜூலை மாதம் 31 நாளாக மாறியது. காலண்டர் மொத்தமும் மாற வேண்டியது வந்தது.
ஆகஸ்ட் 30 நாளானது இப்படிக் கொஞ்ச காலம் போனது. பின்னர் அகஸ்டியஸ் ஸீஸரின் ஆதரவாளர்கள் ஆகஸ்ட் மாதமும் 31 நாளாக இருக்க வேண்டும் என்று கோரினர். மீண்டும் பிப்ரவரி மாதத்திலிருந்து ஒரு நாள் பிடுங்கி ஆகஸ்டில் சேர்க்கப்பட்டது. ஆக இத்தனைக் குழப்பத்திற்குப் பின்னர்தான் நாம் வைத்திருக்கும் இந்தக் காலண்டர் தயாரிக்கப்பட்டது.
இது ‘கிரீகோரியன்’ (Gregorian) காலண்டர் என்று அழைக்கப்படும்.
இப்படி ‘முட்டாள்தனமான’ ஒரு வரலாற்றை மூடிமறைத்து நம்மைப் பின்பற்ற வைத்துள்ள மேற்கத்தியர்களை உண்மையில் ‘அறிவாளிகள்’ என்ற சொல்ல வேண்டும்.ஆக இந்தக் காலண்டருக்கும் இயேசுவிற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஆனால் எப்பொழுது கிறிஸ்தவம் ‘ரோமன் கத்தோலிஸம்’ என்று மாறியதோ, அந்நாள் தொடங்கி கொள்கை முதல் கலாச்சாரம் வரை அனைத்திலும் ரோம கிரேக்க அநாகரிகம் (Paganism) ஊடுருவி விட்டது. 
கிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.
உரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்டியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள்! யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.
அதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.
யூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.
அப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.
ஆண்டு, மாதக் கணக்குகள் ஏதேனும் ஒரு நாட்காட்டியின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகின்றன. ஆங்கில நாட்காட்டி என்றவுடன் நாம் அது ஆங்கில மொழி தோன்றிய இங்கிலாந்தின் நாட்காட்டி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. கூறப்போனால், இது ஆங்கில நாட்காட்டி என்பதைவிட இதைச் சர்வதேச நாட்காட்டி என்று தான் கூற வேண்டும். இது க்ரிகேரியன் நாட்காட்டி-யை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, தங்கள் நாட்டுக்கெனத் தனித்தனியே வெவ்வேறு நாட்காட்டிகளைக் கொண்ட நாடுகள் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒப்பந்தகள் ஆகியவற்றுக்கு இந்த நாட்காட்டியையே பயன்படுத்துகின்றன.
இந்த க்ரிகேரியன் நாட்காட்டி வழக்கத்திற்கு வந்ததே 16-ஆம் நூற்றாண்டில் தான். இது கிருஸ்துவர்கள் (குறிப்பாகக் கத்தோலிகர்கள்) தங்கள் ஈஸ்டர் பண்டிகையைச் சரியாகக் கணிக்க வடிவமைக்கப்பட்டது. முதலில் வெவ்வேறு கத்தோலிகக் குழுக்களாலேயே  நீண்ட சர்ச்சைக்குள்ளான இந்த நாட்காட்டி பின்னர் படிப்படியாக பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்பட்டது.
இது பெருமளவில் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஜூலியன் நாட்காட்டியின் அடிப்படையிலேயே (சில வேறுபாடுகளுடன்)த் தயாரிக்கப்பட்டது. கிமு-222 ஆண்டிற்கு முன் வரை புத்தாண்டு மே மாதம் முதல் தேதியில் கொண்டாடப்பட்டு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். கிமு-222 ஆண்டு முதல் கிமு.153 ஆம் ஆண்டு வரை புத்தாண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கிமு.153-ஆம் ஆண்டு முதல் புத்தாண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. கிமு.45 ஆம் ஆண்டு முதல் ஜுலியன் நாட்காட்டி அமலுக்கு வந்த பின்னரும் பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசுகள் ஆண்டுத் துவக்கத்தை மாற்ற முயன்றும் (கணக்கு வழக்கு ஆண்டுகளை மாற்றிய போதும்) மக்களைப் பொறுத்தவரை பொது ஆண்டின் துவக்கம் ஜனவரி 1-ஆம் தேதியாகவே இருந்து வருகிறது.
இந்தியர்களைப் பொறுத்தவரை ஜனவரி முதல் தேதியை கிருத்துவ ஆண்டின் துவக்கம் என்றும் கூறுவோம். ஆனால், 10-17 நூற்றாண்டுகள் வரை பல்வேறு (ஐரோப்பிய) நாடுகள் கிருத்துவ மதாலயங்களின் ஈர்ப்பால்/தூண்டுதலால் தங்கள் நாடுகளின் ஆண்டு துவக்கத்தை டிஸம்பர்-25, மார்ச்-25 (தேவமாதா கருவுற்ற நாள்), ஈஸ்டர் ஆகிய நாட்களுக்கு மாற்ற முனைந்ததும் நடைபெற்றுள்ளது.  க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாறியவுடன் பெரும்பாலான நாடுகள் ஜனவரி முதல் தேதியையே மீண்டும் ஆண்டுத் துவக்கமாகக் கொண்டன.
ஜூலியன் நாட்காட்டிக்கும் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் இடையில் ஒவ்வொரு நானூறு ஆண்டுகளுக்கும் மூன்று நாட்கள் வித்யாசம் உண்டு. க்ரிகேரியன் நாட்காட்டியில் 1700,1800,1900 ஆகிய ஆண்டுகள் லீப் வருடமாக இல்லாமல் சாதாரண ஆண்டாக (அதாவது, பிப்ரவரியில் 28 தேதிகளுடன் 365 நாட்கள் கொண்டு) இருக்கும். இதனால், கத்தோலிகத் திருச்சபையால் 16-ஆம் நூற்றாண்டில் (1582-இல்) ஜூலியன் நாட்காட்டியிலிருந்து 10-நாட்கள் நீக்கப்பட்டன. 1582-ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி (விழாயக் கிழமைக்கு) அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) என்று குறிக்கப்பட்டு க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றப்பட்டது.

https://m.facebook.com/story.php?story_fbid=564218327078581&substory_index=0&id=279420452225038
ஆனாலும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் 17-18 ஆம் நூற்றாண்டில் தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் மாற்றம் செய்து கொண்டன.
ஆங்கில மொழியின் தாய்நாடான இங்கிலாந்தில் 1752-ஆம் ஆண்டு தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப் பட்டது. அப்பொழுது 11 நாட்கள் குறைக்கப்பட வேண்டியிருந்தது.  ’11 நாட்களைத் திருப்பிக் கொடு’ என்பது போன்ற போராட்டங்களும் ஏற்பட மாற்றம் 1800-க்குத் தள்ளிப் போனது. (அப்பொழுது 12 நாட்கள் குறைக்க நேரிட்டது). பழைய நிதி ஆண்டின் துவக்கமான மார்ச்-25 (பெருமாட்டி தினம்) இலிருந்து ஏப்ரல் -6 ஆம் தேதிக்கு நிதி ஆண்டு மாற்றப்பட்டது.
ரஷ்யாவின் க்ரிகேரியன் ஆண்டு 1917-இல் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. கூறப்போனால் அதை அக்டோபர் புரட்சி என்பதே தவறு. ஏனெனில், புரட்சி நடந்தது ஜூலியன் வருடத்தின் அக்டோபர் மாதம்; ஆனால் க்ரிகேரியனில் அப்பொழுது நவம்பர் ஆரம்பம் ஆகிவிட்டது. 1918-இல் ஜனவரி-31 ஆம் தேதிக்குப் பின் பிப்ரவரி-14 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.
எப்படி இருந்தாலும் தற்போது பெரும்பாலான நாடுகளில் (மதச் சடங்குகளைத் தவிர்த்த விஷயங்களில்) இந்த க்ரிகேரியன் நாட்காட்டிகள் வழக்கத்திற்கு வந்துவிட்டபடியால் ஜனவரி முதல் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H