புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான
வழிகாட்டுதல் நிகழ்ச்சி. கல்வியாளா் திரு ஜெயப்பிரகாஷ் ஏ.காந்தி அவா்கள் பங்கேற்று
ஆலோசனைகள் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீ்த்திறன் மாணவா்களை
தோ்ந்தெடுத்து வருகிற ஆண்டில் உயா்கல்வியினை அடையும் வகையிலும் அரசுப்பொதுத்தோ்வில்
அதிக மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதன்மையான இடத்தினைப் பெறும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறையின்
சார்பில் புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் உண்டு உறைவிட சிறப்புப்பயிற்சி
முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு
மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலைமையாசிரியா்.
ஒரு முதுகலை ஆசிரியா். ஒரு பட்டதாரி ஆசிரியா். பத்தாம் வகுப்பில் பயிலும் மீத்திற மாணவா் ஒருவா், பன்னிரண்டாம் வகுப்பில்
கணிதப்பிரிவு, அறிவியல் பிரிவு மற்றும் கணினி அறிவியல் பிரிவு ஆகியவற்றில் முதன்மையான
இடத்தினைப்பெறும் மீத்திற மாணவா் ஒருவா். இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு
மற்றும் அரசு உதவிப்பெறும் உயா்நிலைப்பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலைமையாசிரியா்.
ஒரு பட்டதாரி ஆசிரியா். பத்தாம் வகுப்பில் பயிலும் மீத்திற மாணவா் ஒருவா் ஆகியோர் தோ்வு
செய்யப்பட்டு இன்று 31 ஆம் தேதி(வியாழக்கிழமை)
காலை 10.00 மணியளவில் உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதுக்கோட்டை மஹராஜ்
மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திருமதி செ. சாந்தி
அவா்கள் தலைமையேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் புதுக்கோட்டை கல்வி
மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலா்(பொ) திரு ப.மாணிக்கம் அவா்கள் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை கல்வியாளா்
திரு ஜெயப்பிரகாஷ் ஏ.காந்தி அவா்கள் கலந்துகொண்டு அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயா்நிலை
மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்வழியில் படிக்கும் மீத்திற மாணவா்களிடம் உயா்கல்வி
வாய்ப்பு குறித்து பேசும்போது கூறியதாவது, இன்றைய நிலையில் மாணவா்கள் கடந்தகால, நிகழ்கால,
எதிர்கால வேலைவாய்ப்புகளைக் கருத்தில்கொண்டு படிப்புகளைத் தோ்வு செய்யவேண்டும். அதோடு
மாணவா்கள் தோ்ந்தெடுத்த பாடப்பிரிவில் பாடத்திட்டத்தையும் தாண்டி சமீபத்திய தொழில்நுட்ப
அறிவினையும் மேம்படுத்திக்கொள்ளவேண்டும். இதேபோல கல்வி நிறுவனங்களும் பாடத்திட்டத்தினையும்
தாண்டி சமீபத்திய தொழில்நுட்பத்தினை கற்பித்தால் மாணவா்களை அவா்களின் வாழ்க்கையில்
வெற்றி பெற வைக்கமுடியும். மேலும் மாணவா்கள் பெற்றோர்களுக்கும் ஆசிரியா்களுக்கும் மதிப்பளித்து
படித்தால் உயா்ந்த இலக்கை அடையலாம். இதுமட்டுமல்லாமல்
மாணவா்கள் தாங்கள் தோ்வு செய்த படிப்பில் முதுநிலைப்படிப்பு வரை படிக்கும்போது அவா்கள்
வேலைவாய்ப்புகளை எளிதில் பெறலாம். மாணா்கள் ஒரு படிப்பை படித்து முடித்த பின்பு நான்
இந்த படிப்பை படித்திருக்கிறேன் என்று கூறாமல் உங்களுக்குத் தேவையான படிப்பை நான் படித்திருக்கிறேன்
என்று கூறும் போது வேலைவாய்ப்புகள் எளிதில் கிட்டும். பள்ளிக்கல்வித்துறையின் சார்பில்
அரசுப்பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மீத்திற மாணவா்களுக்கு என்போன்ற கல்வியாளரை
அழைத்து உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை நடத்துவது மிகவும் பாராட்டுக்குரியது.
இருந்த இடத்தில் இருந்து எதுவும் கிடைப்பதில்லை, எழுந்து வந்தால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின்
சார்பில் நடைபெறும் உண்டு உறைவிட சிறப்புப்பயிற்சி முகாமில் படித்து மாவட்டத்தில் முதலிடத்தினைப்
பெறும் மாணவரின் உயா்கல்விக்கான முதலாமாண்டு கட்டணத்தினை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவ்வாறு
படிக்கும் மாணவா் இரண்டாம் ஆண்டில் 75 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தால் இரண்டாம்
ஆண்டு கட்டணத்தினையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். இவ்வாறு அவா் பேசினார். மேலும் தற்போதைய
நிலையில் வேலைவாய்ப்புள்ள பல்வேறு வகையான படிப்புகள் குறித்து விரிவாகவும் விளக்கமாகவும்
எடுத்துக்கூறினார். அதனைத்தொடா்ந்து மாணவர்களின் உயா்கல்விகுறித்த சந்தேகங்களுக்கு
பதிலளித்தார். சிறந்த கேள்விகள் எழுப்பிய மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கினார். நிறைவாக
அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலா்(பொ) திரு ஆா்.சண்முகம் அவா்கள் நன்றி
கூறினார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 125 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயா்நிலைப்
பள்ளிகளில் இருந்து தலைமையாசிரியா், பட்டதாரி ஆசிரியா். பத்தாம் வகுப்பு மீத்திறன்
மாணவா் என மொத்தம் 375 பேரும் 115 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் மேல்நிலைப்பள்ளிகளில்
இருந்து தலைமையாசிரியா், முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், பத்தாம் வகுப்பு மீத்திறன்
மாணவா், பன்னிரண்டாம் வகுப்பு மீத்திறன் மாணவா் என மொத்தம் 575 பேரும் உண்டு உறைவிட
சிறப்புப்பயிற்சி முகாமில் உள்ள கருத்தாளா்கள், பாட வல்லுனா்கள், ஒருங்கிணைப்பாளா்கள்
என ஆக மொத்தம் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனா்.