தமிழகத்தில் உள்ள 36,000 இந்துக் கோயில்களில் பக்தர்களுக்கான ஆடைக்
கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன. இந்தப்
புதிய நடைமுறை பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால் கோயிலுக்கு வரும் ஆண்கள், வேட்டி, பைஜாமா, மேல் துண்டு போன்ற ஆடைகளை அணிந்து வரவேண்டும். பெண்கள் சேலை, தாவணி, சுடிதார், ஷால் போன்ற உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும்.
தடை விதிக்கப்பட்ட ஆடைகள்: ஷார்ட்ஸ், டீ-சர்ட், மிடி, குட்டைப் பாவாடை, ஜீன்ஸ், "லெக்கின்ஸ்' போன்ற ஆடை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்த நடைமுறையை ஜனவரி 1 -ஆம் தேதி முதல் அனைத்து இந்து கோயில்களிலும் அமல்படுத்த அறநிலையத்துறைச் செயலர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
காவல்துறையினர், தீயணைப்புப் படையினர் போன்ற
சீருடைப் பணிகளில் உள்ளோருக்கு அவர்களது அலுவல் சார்ந்த உடையில்
கோயிலுக்குள் செல்வதில் தடை இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவில்
குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு காரணமாக இந்த நடைமுறை தமிழகம்
முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள
36,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.கோயிலின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதால் கோயிலுக்கு வரும் ஆண்கள், வேட்டி, பைஜாமா, மேல் துண்டு போன்ற ஆடைகளை அணிந்து வரவேண்டும். பெண்கள் சேலை, தாவணி, சுடிதார், ஷால் போன்ற உடலை மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டும்.
தடை விதிக்கப்பட்ட ஆடைகள்: ஷார்ட்ஸ், டீ-சர்ட், மிடி, குட்டைப் பாவாடை, ஜீன்ஸ், "லெக்கின்ஸ்' போன்ற ஆடை அணிந்து வருபவர்களை கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. இந்த நடைமுறையை ஜனவரி 1 -ஆம் தேதி முதல் அனைத்து இந்து கோயில்களிலும் அமல்படுத்த அறநிலையத்துறைச் செயலர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
அனைத்து ஆலயங்களிலும்...சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு நெல்லையப்பர் கோயில், அருள்மிகு அழகிய திரிபுராந்தீஸ்வரர் கோயில், பாளையஞ்சாலை குமாரசுவாமி கோயில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில், பாபநாசம் சிவன் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவில்பட்டி செண்பகவள்ளி கோயில், கன்னியாகுமரி அம்மன் கோயில், நாகராஜா கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் உள்பட அனைத்துக் கோயில்களிலும் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பான தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. கோயில் நுழைவு வாயிலில் நீதிமன்ற உத்தரவின் அறிவிப்பு பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய உடையில் பக்தர்கள்: புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு வழிபாட்டுக்காக வெள்ளிக்கிழமை கோயில்களுக்கு வந்த பக்தர்களில் 90 சதவீதம் பேர் பாரம்பரிய ஆடைகளையே உடுத்தியிருந்தனர். எனினும், விதிமுறைகளை மீறி ஜீன்ஸ், டீ-சர்ட், லெகின்ஸ், மிடி, ஷார்ட்ஸ் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வந்த பெரும்பாலான ஆண்-பெண் பக்தர்களை கோயில் நிர்வாகத்தினர், போலீஸார் ஆலயத்துக்குள் அனுமதிக்கவில்லை. சில கோயில்களில் விதிமுறைகளை மீறி ஆடை அணிந்துவந்த பக்தர்கள், அடுத்த முறை கோயிலுக்கு வரும்போது கண்டிப்பாக பாரம்பரிய ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
மாணவிகள் வரவேற்பு: இந்து கோயில்களில் வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறை குறித்து சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வந்த கல்லூரி மாணவிகள் லட்சுமி பிரியா, சண்முக வடிவு, இலக்கியா உள்ளிட்டோர் கூறியதாவது:
""கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுடன் அந்த மக்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது. லெக்கின்ஸ், ஜீன்ஸ் போன்ற ஆடைகளால் காண்போரின் கவனம் சிதறுகிறது என்றால் அந்த உடைகளை தவிர்ப்பதில் தயக்கம் காட்டக் கூடாது. புதிய கட்டுப்பாட்டின் காரணமாக பெண்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்படுவதுடன் கோயிலின் புனிதத்தன்மை மேன்மை அடையும்.
அதே நேரத்தில் கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகைகள் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயிலுக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வருவதால் அவை ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இடம்பெற வேண்டும்'' என்றனர்.
வெளிநாட்டு பக்தர்களுக்கு வேட்டி, சேலை!
தமிழகத்தின் முக்கியக் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடு விதிகள் குறித்து சுற்றுலா வழிகாட்டிகள் விளக்கினர். இதையடுத்து வெளிநாட்டினர், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்பட சில கோயில்களில் வெளியே விற்கப்பட்ட காவி ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி: இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள கோயில்களுக்கு வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு உதவ கோயில் நிர்வாகத்தின் சார்பில் வேட்டி, சேலை உள்ளிட்டவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி. லட்சுமணன் தெரிவித்தார்.