தென்மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை
வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய
அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றாலும், தற்போது அந்தமான் அருகே அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் (சனிக்கிழமை) முதல் 4–ந்தேதி வரை 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இடி–மின்னலுடன் கூடிய மழையையும் எதிர்ப்பார்க்கலாம். கனமழைக்கு வாய்ப்பு
இல்லை. சென்னையில் வறண்ட வானிலை நிலவும். அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன்
காணப்படும். புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடமாவட்டங்களிலும் வறண்ட
வானிலையே நிலவும்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்றாலும், தற்போது அந்தமான் அருகே அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களில் (சனிக்கிழமை) முதல் 4–ந்தேதி வரை 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.