ஆற்றல்சார் பல்கலைக்கழகம் என்ற திட்டத்தின் கீழ் ஆராய்ச்சி மேம்பாட்டுக்காக
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ரூ. 75 கோடி நிதி அளிக்கப்பட உள்ளது என
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறினார்.
மூன்று நாள் சர்வதேச கல்வியாளர்கள் மாநாடு-2016 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இதில், ஜெர்மன் தூதர் அசிம் பபிக், ஆஸ்திரேலிய தூதர் சீன் கெல்லி, பிரான்ஸ் தூதர் கௌசல்யா தேவி, யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ், ஐஐடி இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி, அண்ணா பல்கலை. துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவுக்குப் பின்னர் ஹெச். தேவராஜ் அளித்த பேட்டி:மூன்று நாள் சர்வதேச கல்வியாளர்கள் மாநாடு-2016 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இதில், ஜெர்மன் தூதர் அசிம் பபிக், ஆஸ்திரேலிய தூதர் சீன் கெல்லி, பிரான்ஸ் தூதர் கௌசல்யா தேவி, யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ், ஐஐடி இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி, அண்ணா பல்கலை. துணைவேந்தர் ராஜாராம், பதிவாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ஆற்றல்சார் பல்கலைக்கழக திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 15 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கு ரூ. 75 கோடி வரை நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது 16-ஆவது பல்கலைக்கழகமாக, உடலில் பாக்டீரியா தாக்கத்தைக் கண்டுபிடிக்கக் கூடிய ஆராய்ச்சித் திட்டத்துக்காக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், வருகிற ஏப்ரலில் ரூ. 50 கோடி முதல் ரூ. 75 கோடி வரை யுஜிசி வழங்கும்.
அதோடு, சமூகத்துக்கு பயன்படக் கூடிய ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த 16 ஆற்றல்சார் பல்கலைக்கழகங்களிலிருந்து 3 முதல் 5 பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 150 கோடி வழங்கப்பட உள்ளது. 2017-ஆம் ஆண்டில் இதற்கான தேர்வு நடைபெறும்.
20 பொறியியல் கல்லூரிகள் கலைக் கல்லூரிகளாக விண்ணப்பம்: மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்ததால், 15 முதல் 20 பொறியியல் கல்லூரிகள், கலை-அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்ய யுஜிசி-யிடம் விண்ணப்பித்துள்ளன. பொறியியல் பட்டத்துக்கு மதிப்பு இல்லாமல் போனதும், வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதனால், அடிப்படை அறிவியல் படிக்கத் தொடங்கியுள்ளனர். பொறியியல் கல்லூரிகளின் இந்த கோரிக்கை தொடர்பாக யுஜிசி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
முன்னதாக விழாவில் ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி பேசியது:
ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூர் என பல்வேறு நாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சென்னை ஐஐடி ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. இதன்படி, 12 ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோல, முதுநிலை பொறியியல் படிப்புகளில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தப்படும் என்றார்.