கருப்பு ஆண்டாக 2016 மாறக்கூடாது என வேண்டுதலில் சுமார் 3300 பணியிலுள்ள
பட்டதாரி ஆசிரியர்கள்.. தமிழக கல்வித் துறை கொடுத்துள்ள தகவல் அறியும்
உரிமை சட்ட விபரக்குறிப்பில் தெளிவாக தெரிவது ஆசிரியர் தகுதித் தேர்வு
என்பது போட்டித் தேர்வு அல்ல.. தகுதியான ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவே
என்பதாகும்.
கடந்த 2½ ஆண்டுகளாக
ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் நடத்தப்படாமல் இருந்த நிலையிலும் கூட
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி
ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை முழுவதும்
நிரூபித்துக் காட்டியும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை
என்ற மன கஷ்டத்தில் இந்த 2016 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளனர்.
காரணம்
2016 நவம்பர் 15 ஆம் நாளுக்கு பிறகு அவர்களின் நிலையும் பணியும்....
கேள்விக்குறி என்பதை கடந்த பல நாட்களாக ஊடகங்கள் நினைவுபடுத்தி
வருகின்றன.கடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட)
நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்களில்...
ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி அவர்களுக்கு நியாயமாக கிடைக்க
வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்பட்ட நிலையிலும் பணியாற்றி வருகின்றனர்.
பல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...ஒரு சில ஆசிரியர்களுக்கு...* வளரூதியம் இல்லை.* ஊக்க ஊதியம் இல்லை.* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.* மருத்துவ விடுப்புக்கு அனுமதி இல்லை.* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.*
வரையறை விடுப்பு இல்லை.₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த
நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில்
உள்ளனர்.
இவை
எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்த
ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு
இல்லை.தமிழக முதல்வர் இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும்
நிலையில் பணியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி
ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழுவிலக்கு அளிப்பது
மட்டுமே ஒரே தீர்வு என்பது உண்மை.
இவர்களின்
ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்தகொள்கை முடிவில் மறு
பரிசீலனை செய்து பணியில் உள்ள இந்த 3300 பட்டதாரி ஆசிரியர்களின்
எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து ஒரு அரசாணை பிறப்பிக்க வேண்டும்
என தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுகின்றனர்.இந்த 2016 ஆம் ஆண்டு இவ்வகையான
ஆசிரியர்களுக்கு கருப்பு ஆண்டாக மாறாமல் வெளிச்ச ஆண்டாக மாற்றம் பெறுவது
தற்போதைய தமிழக அரசின் கருணையில் தான் உள்ளது.
ஆக்கம்:- தென்னகக் கல்விக் குழு.