அழகப்பா பல்கலை: தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள்:
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளநிலை பிரிவில் பி.ஏ., வரலாறு, பி.பி.ஏ., பி.பி.ஏ.,
நேரடி இரண்டாம் ஆண்டு, பி.பி.ஏ., சி.எஸ்., பி.பி.ஏ., சி.எஸ்., நேரடி
இரண்டாம் ஆண்டு, பி.பி.ஏ., வங்கியில், வங்கியியல் நேரடி இரண்டாம் ஆண்டு,
பி.பி.எம்., பி.காம்., நேரடி இரண்டாம் ஆண்டு, பி.காம் (சி.ஏ., சி.ஏ., நேரடி
இரண்டாம் ஆண்டு), பி.எஸ்.சி., (கணிதம், கணினி அறிவியல், நேரடி இரண்டாம்
ஆண்டு, சைகாலஜி, பி.லிப்., அன்ட் ஐ.எஸ்.சி.,முதுநிலை பிரிவில் எம்.ஏ.,
தமிழ், எம்.ஏ., வரலாறு, கல்வியியல், பி.எம். அன்ட் ஐ.ஆர்., பி.எம்., அன்ட்
ஐ.ஆர்., நேரடி இரண்டாம் ஆண்டு, எம்.பி.ஏ., (எச்.ஆர்.எம்., டூரிசம்,
ரீடெய்ல் மேனேஜ்மெண்ட், கார்ப்பரேட் மேனேஜ்மென்ட், ஐந்து ஆண்டு
இண்டகிரேடட்), எம்.காம்., பைனான்ஸ் அன்ட் கண்ட்ரோல், எம்.எப்.சி.,
எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,
எம்.லிப்., ஐ.எஸ்.சி.,தொழில் நுட்ப பிரிவில் பி.எட்., எம்.பில்., பிரிவில்
வரலாறு, பொருளாதாரம், கல்வியியல், மேலாண்மை, வணிகவியல், கணிதம், இயற்பியல்,
வேதியியல், கணினி அறிவியல் மற்றும் நூலக தகவல் தொழில் நுட்ப அறிவியல்,
பி.ஜி., டிப்ளமோ பிரிவில் பி.ஜி.டி. (பி.எம்.,), பி.ஜி.டி., பி.எம்., அன்ட்
ஐ.ஆர்., பி.ஜி.டி., எச்.ஆர்.எம்., ஆகிவற்றின் முடிவுகள் இணையதளத்திலும்
வெளியிடப்பட்டுள்ளன.
முடிவு வெளியான 10 நாட்களுக்குள் (மார்ச் 4-க்குள்),
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைகழக இணையதளம் மூலம்
விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து, மறுமதிப்பீட்டு கட்டணமாக பாடம் ஒன்றுக்கு
ரூ.500 வரைவோலையை, பதிவாளர், அழகப்பா பல்கலைகழகம் என்ற பெயரில் எடுத்து,
தேர்வு பிரிவுக்கு விண்ணப்பிக்குமாறு தேர்வாணையர் குருமல்லேஷ் பிரபு
தெரிவித்துள்ளார்.