இதை ரோட்டரி சங்கத்தின் மண்டல ரோட்டரி சங்க கவர்னர் சி.ஆர்.ராஜூ ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார். இதுகுறித்து அறக்கட்டளையின் தலைவர் சிம்மச்சந்திரன் கூறியது:-
இந்த மையத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை காலை 10 முதல் மாலை 5 மணி வரை ஆங்கிலம், தமிழ் அடிப்படை கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சி மையத்துக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் Tamilnadu differently Abled Federation Charitable Trust என்ற பெயருக்கு எண்.10, 4வது குறுக்கு தெரு, பாலாஜி நகர், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032 என்ற முகவரிக்கு பணமாகவோ, வங்கி வரைவோலையாகவோ அனுப்பி வைக்கலாம். மேலும் தொடர்புக்கு 044-22251584 என்றார்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பு ஆணையர் மணிவாசன், கூட்டமைப்பின் பொதுச் செயலர் பொன்னுச்சாமி, ரோட்டரி சங்க நிர்வாகி கோபிநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்








