கனரா வங்கியில் பணி; விண்ணப்பங்கள் வரவேற்பு !
கனரா வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள அதிகாரி
பணியிடங்களுக்கு, வர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.இப்பணியிடங்களுக்கு, 1.04.2016 தேதியின் படி, முதல்
இரண்டு பிரிவுக்கு 55 வயதுக்குள்ளும், மூன்றாம் பிரிவு அதிகாரி பணிக்கு,
55வயதுக்குள்ளும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சி.ஏ.,சிஎஸ்.,
ஐ.சி.டபில்யு.ஏ., எம்.பி.ஏ., பி.இ., பி.டெக்., முடித்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 7ம் தேதிக்கு முன்பு.
கனரா வங்கி, பணியாளர்கள் தேர்வு மையம், மனிதவள பிரிவு, தலைமை அலுவலகம்,
113/1, ஜீவன் பிரகாஷ் பில்டிங், ஜெ.சி ரோடு, பெங்களூர்-560002 என்ற
முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் முழுமையான விவரங்களை http:
//www.canarabank.com என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.







