7-ஆவது ஊதியக் குழுவிலும் பாதிப்பு ஏற்பட்டால் போராட்டத்தி் ஈடுபடுவோம் என இடைநிலை ஆசிரியர் சங்கம்அறிவித்துள்ளது.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநிலசெயற்குழுக் கூட்டம் விழுப்புரம் தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
7-ஆவது ஊதியக் குழுவிலும் மீண்டும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டால் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற போராட்டத்தை கையில் எடுக்கப்படும்.மத்திய அரசு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்தியவுடன், மாநில அரசும் அதனை அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றினர். மாவட்ட துணைச் செயலாளர்எஸ்.வேல்முருகன் நன்றி கூறினார்.








