
கூர்கா என்ற பெயர் அனேகம் பேருக்கு தெரிந்திருக்கலாம்..
ஆனால் அவர்களைப் பற்றியும் இந்திய இராணுவத்தில் அவர்களின் பங்கையும் அவர்களின் வீரத்தையும் இப்போது காணலாம்
கூர்கா
இவர்களின் பூர்வீகம் நேபாளம்..இந்தியாவில் அஸ்ஸாம் மலைப்பகுதியில் வசித்து வருகின்றனர்..இந்தியா நேபாளம் பிரிவினையின் போது ஆங்கில அதிகாரியால் இந்தியாவிற்கு பிரிக்கப்பட்ட இராணுவத்தில் 6 கூர்கா பட்டாலியன்கள் இருந்தன..பின்பு அவர்களின் திறமையைக் கண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் அதிக அளவில் கூர்கா வீரர்களை இராணுவத்தில் இணைக்கத் தொடங்கினர்..
சுதந்திரத்திற்கு முன்பு
சுதந்திரம் அடைவதற்கு முன்பு முதல் உலகப்போரில் ராயல் இந்திய இராணுவம் என்ற பெயரில் கலந்து கொண்டனர்..ரங்கூன் மற்றும் ஆப்பிரிக்காவில் நடந்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர்(இரண்டாம் உலகப் போர்)
சுதந்திரத்திற்கு பின் இந்திய இராணுவத்தில் 6 பட்டாலியன்கள் இருந்தன..நடைபெற்ற அனைத்து போர்களிலும் பங்கேற்று பல்வேறு விதமான வீரதீர செயல்களுக்கான பதக்கங்களை(பரம் வீர் சக்ரா மற்றும் மகா வீர் சக்ரா) பெற்றனர்..
இந்தியாவின் தலைசிறந்த தளபதி என அழைக்கபபடும் சாம் மானேக்சாவைத் தந்தது கூர்கா ரெஜிமென்ட் தான்..
தற்போது 7 கூர்கா ரெஜிமெண்ட்களில் மொத்தமாக 39 பட்டாலியன்கள் உள்ளன.அவை
1 Gorkha Rifles 5 battalions (previously 1st King George V's Own Gurkha Rifles (The Malaun Regiment)).
3 Gorkha Rifles 5 battalions (previously 3rd Queen Alexandra's Own Gurkha Rifles).
4 Gorkha Rifles 5 battalions (previously 4th Prince of Wales's Own Gurkha Rifles).
5 Gorkha Rifles (Frontier Force) 6 battalions (previously 5th Royal Gurkha Rifles (Frontier Force)).
8 Gorkha Rifles 6 battalions.
9 Gorkha Rifles 6 battalions.
11 Gorkha Rifles 7 battalions and one TA battalion (107 Inf Bn (11GR) (raised after the independence of India)
உலகத்திலேயே மிகவும் அஞ்சக்கூடிய படையாக கூர்கா ரெஜிமென்ட் உள்ளது..
இவர்களின் war cry "Jai Maha Kali, Ayo Gorkhali’ which translates to Hail Goddess Kali, The Gorkhas Are Here.
தற்போது தளபதியாக இருக்கும் தல்பீர் சிங் கூர்கா
ரெஜிமென்டில் இருந்து வந்தவர் தான்.
இந்த ரெஜிமென்ட் தொடங்கப்பட்டு 200 வருடங்கள் நிறைவுற்றுள்ளது
கூர்கா வீரர்களைப் பற்றி தளபதி மானெக்சாவின் வார்த்தைகள்
"ஒருவன் தான் இறப்பதில் தனக்கு வருத்தம் இல்லை என்று கூறினால் ஒன்று அவன் பொய் சொல்லவேண்டும் அல்லது அவன் கூர்கா வீரனாக இருக்க வேண்டும்"
கூர்கா வீரர்களை தனித்தன்மையுடன் காட்டுவது அவர்களின் குக்ரி என்ற கத்திதான்..அதைக் கொண்டு எதிரியின் கழுத்தை அறுத்து கொள்வார்களாம்..முதல் முதலில் அதை உபயோகிக்கும் போது இரத்தபலி கொடுப்பார்களாம்..அதே போல் அவர்களின் பயிற்சியும் மிகக் கொடூரமாக இருக்கும்
கூர்கா வீரர்கள் குக்ரி நடனம் என்ற ஒரு நடனம் ஆடுவார்கள்..பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்
கடைசியாக எல்லையில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஒரு போஸ்டுக்கு கூர்கா ரெஜிமென்ட் அனுப்பப்பட்டது..வீரர்கள் வழக்கமான ரோந்தில் இருக்கும் போது சில பாகிஸ்தானிய வீரர்கள் நம் எல்லைக்குள் புகுந்து போஸ்டில் இருந்த இயந்திரத் துப்பாக்கியை திருடிச் சென்றனர்..சென்றபின் தொடர்ச்சியாக இந்திய எல்லையை நோக்கி சுடத் தொடங்கினர்
இதை அறிந்த பயமறியா கூர்கா வீரர்களில் சிலர் பாகிஸ்தானிய எல்லைக்குள் புகுந்து அவர்களின் போஸ்டை சூரையாடி ஒரு கேப்டனின் சிறுவயது மகளோடு நம் எல்லை திரும்பினர்
திரும்பிய அந்த வீரர்கள் அந்த குழந்தையை பங்கரில் மீது உட்கார வைத்தனர்..இதையறியாமல் பாகிஸ்தானிய வீரர்கள் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்தனர்..பங்கரின் மீது ஏதோ ஒரு அசைவைஅந்த கேப்டன் பைனோகுலர் மூலம் கண்டு துப்பாக்கிச் சூடை நிறுத்தி பதறி வெள்ளைக் கொடியோடு வந்து நம்மிடம் இருந்து திருடிய இயந்திரத் துப்பாக்கியை கொடுத்து விட்டு அவர்கள் குழந்தையை மீட்டுச் சென்றனர்..
யூடியூபில் merciless training of Gurkha என்று டைப் செய்து கூர்கா வீரர்களின் பயிற்சியையும் Kukri dance of Gurkha என்று டைப் செய்து கூர்கா வீரர்களின் நடனத்தை காணுங்கள்
தங்களின் கமெண்டை பதிவு செய்யுங்கள்