பட்டதாரி ஆசிரியர்கள் கழக பிரதிநிதிகள் சார்பில், தேர்வுநிலை சான்றிதழ்
வழங்கக்கோரி, கரூர் சி.இ.ஓ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர்.கரூர் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று மாலை, 6 மணிக்கு முதன்மை கல்வி அலுவலர்
ராமசாமியிடம், 50க்கு மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும்
முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் கழக பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள்
கோரிக்கை மனு அளித்தனர்.
அதில்,
கூறியிருப்பதாவது: கடந்த, பத்து ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் பணிபுரியும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்நிலை சான்றிதழ் வழங்கப்படும். இதன்படி,
முதன்மை கல்வி அலுவலகம் மூலம், 480 ஆசிரியர்கள் இயக்குனரகத்துக்கு
விண்ணப்பித்தனர். இதில், 180 ஆசிரியர்களுக்கு மட்டுமே, அந்த சான்றிதழ்
வழங்கப்பட்டது. இச்சான்றிதழ் கிடைக்காவிட்டால், பதவி உயர்வு உட்பட பல்வேறு
சலுகைகள் கிடைக்க வாய்ப்பு இல்லை.எனவே, விடுபட்டவர்களுக்கு விரைவில்
சான்றிதழ் பெற்றுத்தர நடவடிக்கை வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.