அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள இன்ஜி., கல்லுாரிகளில், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, அண்ணா பல்கலையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.இந்த திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.தொழிற்கல்வி பயிற்சி திட்டத்தில் பல்கலையுடன் இணைந்து செயல்பட உள்ள நிறுவனங்கள், தங்கள் பெயர் மற்றும் முகவரியுடன், ஜூன், 15ம் தேதிக்குள், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பிக்கலாம் என, பல்கலை பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.இதுகுறித்த கூடுதல் விவரங்களை, https://www.annauniv.edu/pdf/consortium_advt_2016.pdf என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.