பி.எட்., கல்லுாரிகளின் பருவ தேர்வு முறைமாற்றப்பட்டு, வார இறுதி நாட்களில்
மட்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மாணவர்கள்
மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழகத்தில், 790 பி.எட்.,
கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லுாரிகள், மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின்
அங்கீகாரம் பெற்று, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ்
செயல்படுகின்றன.இரண்டாண்டுகளாக...
தமிழகத்தில்,
பி.எட்., கல்லுாரிகளுக்கென, தனி பல்கலை அமைக்கப்பட்டிருந்தாலும், இணைப்பு
வழங்குதல், மாணவர் சேர்க்கை, தேர்வு நடத்துதல் என, ஒவ்வொரு நடவடிக்கையிலும்
பிரச்னைகள் தொடர்கின்றன. மத்திய அரசின் உத்தரவுப்படி, கடந்த கல்வி ஆண்டு
முதல், பி.எட்., படிப்பு இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டது.இந்நிலையில், புதிய
பாடத்திட்டத்தின் கீழ், முதல் பருவத் தேர்வு, இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.
இதில், புதிய முறையை ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடியாக
அறிவித்துள்ளது.அதாவது, வரும், 18ம் தேதி, முதலாம் ஆண்டு
மாணவர்களுக்கு,ஆண்டு இறுதி தேர்வு நடக்கிறது. வாரத்தின் இறுதி நாட்களான,
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தேர்வு நடத்தப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஒரு வாரத்தில் முடிய வேண்டிய தேர்வு, ஒரு
மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முறையால், பி.எட்., -
எம்.எட்., மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து,
மாணவர்கள் கூறியதாவது:புதிய தேர்வு முறை குறித்து, மாணவர்கள் மற்றும்
பேராசிரியர்களிடம் எந்த வித கருத்தும் கேட்கப்படவில்லை.
விதிமீறல்:
தனியார்
பி.எட்., கல்லுாரிகளில், தினசரி வகுப்பில் சேர்ந்த பலர், வேறு எங்காவது
வேலை செய்து விட்டு, வார இறுதி நாட்களில் மட்டும் வகுப்புக்கு வருகின்றனர்.
இந்த விதிமீறலுக்கு துணை போகும் வகையில், வார இறுதி தேர்வு முறை
அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்முறையை உடனே கைவிட வேண்டும்.இவ்வாறு
அவர்கள் கூறினர்.