பி.எட்., கல்லூரிகளில், இந்த ஆண்டு செய்முறை தேர்வுக்கான மதிப்பெண்,
திடீரென பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் உற்சாகம்
அடைந்துள்ளனர். நாடு முழுவதும், ஓராண்டு பி.எட்., படிப்பு, இந்த ஆண்டு
முதல், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், 690 கல்லுாரிகளில்,70
ஆயிரம் பி.எட்., மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு புதிய
பாடத்திட்டத்தின் கீழ், பி.எட்., படிப்பு நடத்தப்படுகிறது. அதன்படி,
முதலாம் ஆண்டு செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்முறை குறித்து,
கல்லூரிகளுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், 15 விதமான செய்முறை தேர்வுகளுக்கு, 200 மதிப்பெண்கள்
ஒதுக்கப்பட்டுள்ளன.'தியரி' என்ற கருத்தியல்
தேர்வுகளுக்கு, 900 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த
ஆண்டுகளில், மொத்த மதிப்பெண்களில், 50 சதவீதம் செய்முறை
தேர்வுக்குஒதுக்கப்பட்டது. செய்முறை தேர்வு மதிப்பெண்
குறைக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏனென்றால்,
செய்முறை பயிற்சிகள் எடுக்காமலேயே, 50 சதவீத தேர்ச்சிமதிப்பெண்ணான, 100
மதிப்பெண்களை பெற முடியும். அதனால், பல மாணவர்கள் செய்முறை தேர்வுக்கு
செல்லாமல்,ஓ.பி., அடிக்க வாய்ப்புள்ளது என, கல்லூரி பேராசிரியர்கள்
கவலைஅடைந்துள்ளனர்.
மாணவர்கள், முதலாம் ஆண்டில், 40 நாட்கள்
பள்ளிகளுக்கு சென்று பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து பாடம் எடுப்பர்.
அப்போது கிடைக்கும் அனுபவங்களை, வகுப்பில் பாடம் எடுத்தல்; மாணவர்களின்
நடத்தை பற்றி எழுதுதல்; மாணவர்களின் உணர்வை புரிந்து கொள்ளுதல்.
யோகா
பயிற்சி எடுத்து அதை பற்றி எழுதுதல்; பாடங்களில் படித்தது
தொடர்பானகாட்சிகளை, மனிதர்களை நேரில் சென்று பார்த்தல்; வகுப்புகளில் பாடம்
நடத்த தேவையான கருவிகளை உருவாக்குதல் என, 15 வகை செய்முறை தேர்வுகளை
பி.எட்., மாணவர்கள்மேற்கொள்ள வேண்டும். ஆனால், இந்த தேர்வுக்கு, மதிப்பெண்
குறைவாக தரப்படுவதால், வகுப்புகளுக்கு சென்று பாடம் எடுக்கும் செயல்முறை
பயிற்சிகளில் மாணவர்கள் அதிக கவனம்செலுத்தாமல் விட்டு விட வாய்ப்பு
உள்ளதாக, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.