சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புக்கான
கலந்தாய்வு நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்றது.2வது நாளாக இன்றும்
கலந்தாய்வு நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை 8
சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும். செவ்வாய்க்கிழமை 1 மணி நிலவரபடி இதுவரை
2132 இடங்கள் நிரம்பின.
இதில்
இ.சி.இ எனப்படும் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பிற்காக
700-க்கு மேற்பட்ட இடங்கள் நிரம்பியுள்ளன.பி.இ. படிப்பிற்கு அடுத்தப்டுயாக
கணினி அறிவியல் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளை தேர்வு செய்வதில்
மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஐ.டி. படிப்பை 151 பேர் தேர்வு
செய்துள்ளனர். ஆனால் ஏரோநாட்டிக்கல், ஆட்டோ மொபைல் மற்றும் பையோ டெக்னாலஜி
ஆகிய படிப்புகளை மிகவும் குறைந்த அளவு மாணவர்களே தேர்வு செய்துள்ளனர்.
கலந்தாய்வுக்கு வராதோர் எண்ணிக்கை 1231 ஆக அதிகரித்துள்ளது.