பொருளாதாரம் என்றால் என்னவென்று, அமெரிக்கர்களுக்கு, 50 ஆண்டுகள் பாடம்
நடத்தியவன் நான். பொருளாதார வளர்ச்சி மீது தான், இந்தியா கவனம் செலுத்த
வேண்டும்; பணவீக்க விகிதம் பற்றிய கவலை, நமக்கு தேவையில்லை.
சுப்பிரமணியன் சாமி, பா.ஜ., - எம்.பி.,
மூவரும் ஒன்று சேரணும்!
உ.பி.,யில்,
அமேதி, ரேபரேலி தொகுதிகளில், தேர்தல் பிரசாரம் செய்வது பிரியங்காவின்
வழக்கம். ஆனால், உ.பி., மாநிலத்துடன், நாடு முழுவதும் அவர் பிரசாரம்
செய்தால், மிக்க மகிழ்ச்சி அடைவோம். சோனியா தலைமையில், ராகுலும்,
பிரியங்காவும் இணைந்து செயல்பட்டால், காங்கிரசுக்கு புத்துணர்வு
கிடைக்கும்.
திக்விஜய் சிங், காங்., - பொதுச் செயலர்
தண்ணீர் விட மாட்டோம்!
பஞ்சாப்
மாநில மக்களின் நலனை, எக்காரணம் கொண்டும் விட்டு தரமாட்டோம். சட்லெஜ் -
யமுனா நதி இணைப்பு கால்வாய் விவகாரம், இம்மாநில மக்களின் வாழ்வு
தொடர்பானது. பஞ்சாபில் இருந்து, ஒரு சொட்டு தண்ணீர் கூட, வெளியே செல்ல
அனுமதிக்க மாட்டோம்.
சுக்பிர்சிங் பாதல், பஞ்சாப் துணை முதல்வர் - அகாலிதளம்







