இந்த சிக்கன் குழம்பு தேவாமிர்தம் போல் இருக்கும். இந்த குழம்பில் ஆந்திர வாடையும் இருக்கும். இந்த குழம்பை சுடாக இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா, மற்றும் சுடு சாதத்திற்கு ஏற்ற பக்க உணவு.
ஆற்காட்டார் நவாப் வம்சாவளிகள் பிரியாணியின் ஆணி வேர் எனில் முதலியார் மக்கள் அவர்களுக்கு என தனி பாணியில் சமையலில் அசத்துவார்கள் என்பது எள்ளளவும் ஐயமில்லை.
தேவையான பொருட்கள்
சிக்கன் தோலுடன் 500 கிராம்
பசு வெண்ணை 3 மேஜைக்கரண்டி
வெங்காயம் 3 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
பச்சை மிளகாய் 5 ( பொடியாக நறுக்கியது )
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
கொத்தமல்லி விதை 1 மேஜைக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
மிளகு 8
பட்டை 1 இன்ச்
இலவங்கம் 2
கசகசா 1 மேஜைக்கரண்டி
மழு முந்திரி பருப்பு 12
கொத்தமல்லி இலை 1 கைப்பிடி
பசுந்தயிர் 1 கப்
1. வடச்சட்டியை அடுப்புல வைத்து காய்ந்ததும் சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு , கொத்தமல்லி விதை, மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கி கலவையை மற்றுமொரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
2. வடச்சட்டியை அடுப்புல வைத்து அதில் கசகசாவை சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து வைக்கவும்.
3. மிக்சியில் வடைச்சட்டியில் வறுத்த அனைத்தையும், கசகசாவயும் சேர்த்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
4. இப்பொழுது வடைச்சட்டியில் வெண்ணை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
5. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
6. இப்பொழுது சிக்கன் துண்டுகளை போட்டு நன்றாக கிளறவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்புத்தூள் சேர்த்து நன்கு கிளறவும். சில நிமிடங்கள் வதக்கி கொண்டே இருக்க வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
7. இப்பொழுது அதில் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் சிறு தீயில் ( சிம்மில் ) கொதிக்க வைக்க வேண்டும்.
8. இதில் தயிரை சேர்த்துகோங்க நன்றாக கிளறி சிக்கன் நன்கு மென்மையானதாக வேகும் வரை நன்றாக கிளறவும்.
9. இச்சமயத்துல உப்பு மற்றும் காரத்தன்மையை சரி பார்க்கவும் இல்லை எனில் சேர்த்து கொள்ளவும்.
10. கொத்தமல்லி இலைகளை தூவி வடச்சட்டியை இறக்கி வைக்கவும்.








