Space kids India இந்திய அளவில் இளம் விஞ்சானிகளைத் தேர்வு செய்து வருடம் ஒரு மாணவனை உலகில் உள்ள விண்வெளி மையம் சென்று பார்வையிட போட்டி நடத்தியது. அதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
பங்குபெற்ற மாணவர்களில் 94 மாணவர்களைத் தேர்வு செய்து சென்னையில் செயல் விளக்கம் அளிக்கச் செய்தனர். அதில் முதல் சுற்றில் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டாம் சுற்றில் 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பின்பு அவர்களுக்கு ஒரு தலைப்பினை கொடுத்து மேடையில் பேசச் செய்தனர். அத்தனை சுற்றுகளில் வெற்றிபெற்று. அனைவரும் ஜெயகுமார் என்ற பெயரை உச்சரிக்கச் செய்து அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தான். அரசுப் பள்ளிக்கு பெருமை தேடி தந்து தமிழகத்தில் அரசுப்பள்ளியின் பெருமையை நிரூபித்து காட்டி உள்ளான். வெளி மாநில பங்கேற்பாளர்கள் அனைவரும் தமிழக அரசுப்பள்ளியை பார்த்து வியப்படைந்தனர்.
முதன் முதலில் விண்வெளியில் பறந்த ரேகேஷ் சர்மா அவர்கள் கையில் பரிசினையும் அப்துல்கலாம் அவர்களின் பேரன் கையில் சான்றிதழ்ழையும், ரஷ்ய ஒருங்கிணைப்பாளர் கையில் பதக்கத்தையும் பெற்றான்.
இந்திய அளவில் மூன்று மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாத் தேர்வு செய்து உள்ளனர்.











