துறை வாரியாக நிதி ஒதுக்தகீடு விவரம்: தமிழக பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் சென்னைடாஸ்மாக் கடை மூடல், இலவச மின்சாரத்தால் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக மாநில கடன் 2. 5லட்சம் கோடியாக இருப்பதாகவும் தமிழக திருத்திய பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தமிழக நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 89 பக்க பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு :
* வருவாய் பற்றாக்குறை ரூ. 15854.47 கோடி
* அடுத்த ஒராண்டில் 5.35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள்
* ஒராண்டில் சூரிய சக்தி மின்சக்தியுடன் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்
* ஆறுகள் புத்துயிர்த்திட்டத்தின் கீழ் ரூ.24.58 கோடி செலவில் வைகை, நொய்யலாறுகள் தூர்வாரப்படும்
* ரூ.52.64 கோடி செலவில் ஆற்றின் கரையோரங்களில் மரம்வளர்க்கப்படும்
* சாலை பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும்
* கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ.355.81 கோடி ஒதுக்கீடு
* அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படும்
* அடுத்த ஒராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டுமனைபட்டா வழங்கப்படும்.
* ரூ.422 கோடி செலவில் 2,673 வீடுகள் போலீசாருக்கு கட்டித்தரப்படும்
* போலீஸ் துறைக்கு மொத்தமாக ரூ.6102.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* காவல்துறை நவீனமாயக்கலுக்கு ரூ.68.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நகர்ப்புற வாழ்வாதார திட்டங்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு
* இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு
* 2 கோடி நபர்களுக்கு திறன் பயிறசி அளிக்க திறன் மேம்பாட்டு கழககம் அடைமக்கப்பட்டுள்ளது.
* மாநில சமச்சீர வளர்ச்சி நிதியம் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
* நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்டத்திற்கு ரூ.140 கோடி ஒதுக்கீடு
* சாலை பாதுகாப்புக்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு
* 8 கிராம் தங்கம் திட்டத்திற்கு ரூ.703.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இலங்கை அகதிகள் நலனுக்கு 105 கோடி
* மாற்றுத்தினாளிகளுக்கு ஆயரம் இருசக்கர வாகனங்கள் இலவசமாக வழங்கப்படும்
* மாற்றுத்திறனாள் நலனுக்கு ரூ. 396.74 கோடி
* சிறுபான்மையினர் மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு
* 100 யூனிட் இலவச மின்சாரத்தால் ரூ.1,607 கோடி இழப்பு
* 500 டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் ரூ.6,636.08 கோடி இழப்பு
* 7 வது சம்பள கமிஷனை அமல்படுத்த உயர்நிலை குழு
* அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
* சிறைக்காலைத்துறைக்கு ரூ.282.92 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* நீதி நிர்வாகத்திற்கு 993.24 கோடி ஒதுக்கீடு
* 2000 புதிய பஸ்கள் வாங்க ரூ.125 கோடி ஒதுக்கீடு
* கூட்டுறவு வங்கி மூலம் ரூ.6000 கோடி அளவுக்கு புதிய பயிர்க்கடன் வழங்கப்படும்