கிரீன் டீ குடித்தால் தேவையற்ற கொழுப்பை கரைத்திடலாம்
இயற்கையின் கொடையான டீ-யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும்தான். குறிப்பா, கிரீன் டீ-யில அதிக நன்மைகள் இருக்கிறது. கேன்சர், இதய நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ. இதை தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்பு கரைந்து சிலிம் ஆகலாம். மேலும், சக்கரை நோய் வராம காக்குதுங்க. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் குணம் இதுக்கு உண்டு.
உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி, கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப் படுத்தவும் செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனை குறைக்கிறது. தோலில் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுப்பதில் கிரீன் டீ முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நோய்களையும், வயோதிக தன்மையையும் ஏற்படுத்தும் அணுக்களுக்கு எதிராக செயல்படும் மூலப்பொருளுளான கேக்டிக்கைன்ஸ் அதிக அளவு கிரீன் டீ யில் காணப்படுகிறது.கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு, முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி நோய்கள் வராம பாதுகாக்கிறது. நோய் தொற்று கிருமிகள் நம்மிடம் அண்டவிடுவதில்லை. பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டது. மனச்சோர்வை போக்கி தலைவலியையும் சரிசெய்கிறது.
தினமும் கிரீன் டீ பருகுவதால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றம் வேகமடைகிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை அழிக்கவும் உதவுகிறது.
இதன் பலன்கள் முழுவதும் கிடைக்க சர்க்கரையை தவிர்க்க வேண்டியது அவசியம். தேவை என்றால் சிறிதளவு தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
HOW TO PREPARE THE GREEN TEA ?
Bring 2 cups of water, ginger, lemongrass and sugar to boil in a saucepan. Take off the pan from heat, add green tea bags and steep the tea for about 5 minutes. Remove the tea bags if you think the flavor is strong and let the tea cool for about 30 minutes. Pour the tea into a pitcher through a fine strainer.