கால்நடை துறையில், காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு,
ஓராண்டாகியும், தேர்வு நடத்தப்படாததால், ஆறு லட்சம் பேர்
காத்திருக்கின்றனர்.
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாகஉள்ள ஆய்வாளர், கால்நடை பராமரிப்பு
உதவியாளர் உள்ளிட்ட,1,101 பணியிடங்களை நிரப்ப, 2015 ஆகஸ்டில், தமிழக அரசு
அறிவிப்பு வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு, ஆறு லட்சம் பேர் மனு
செய்திருந்தனர். ஆனால், ஓராண்டு நிறைவடைந்த பின்னும், இதுவரை தேர்வு பற்றிய
அறிவிப்பு வராததால், ஏமாற்றமடைந்து உள்ளனர். அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல்
நடைபெற இருப்பதை காரணம் காட்டி, மேலும் தள்ளிவைக்கப்படுமோ என்ற அச்சத்தில்
உள்ளனர்.