மழலையர் பள்ளிகள், அக்டோபர், 30க்குள் அங்கீகாரம் பெற வேண்டும்' என,
கல்வித்துறை கெடு விதித்துள்ளது. 'பிளே ஸ்கூல்' எனப்படும், மழலையர்
பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. சிறிய அறைகளில் இப்பள்ளிகள்
நடத்தப்படுவதால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக, சமூக
ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.
இப்பள்ளிகளை முறைப்படுத்த, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், விதிகளை வகுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, பள்ளிக் கல்வி அதிகாரிகள், விதிகளை வகுத்தனர். இது தொடர்பாக,
பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்ட பின், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த
அரசாணைப்படி, மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க, தொடகa்கக் கல்வித்
துறை முன்வந்துள்ளது. இதுகுறித்து, அதிகாரிகள் நடத்திய ஆய் வில், 6,500
மழலையர் பள்ளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பள்ளிகள் கட்டாயம்
அங்கீகாரம் பெற வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது. உள்கட்டமைப்பு வசதி,
இட வசதி உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கப்படும் என,
அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறுவதற்கு அக்., 30ம் தேதி வரை அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.