கடந்த 2001 முதல் ஆசிரியர்களுக்கான மாறுதல் - ஓளிவு மறைவு இல்லாமல் நடத்திட கலந்தாய்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது.கடந்த 10 ஆண்டுகளாக, முதல்கல்வியாண்டில் பதவிஉயர்வு மூலம் செல்லும் பட்டதாரி, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் அடுத்த கல்வியாண்டில் மாறுதலில் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தது. மேலும் பதவி உயர்வுக்கு செல்லும் போதே அடுத்த ஆண்டில் மாறுதல் கிடைக்கும் என்கிற நம்பிக்கையின் பேரிலேயே பலர் வெளியூர்களுக்கும்,வெளிமாவட்டங்களுக்கும் பதவி உயர்வில் சென்றுள்ளனர்.
ஆனால் இந்த ஆண்டு கடந்த 10 ஆண்டுகளாக பின்பற்றி வந்த நடைமுறையை,மாறுதலுக்கான பள்ளிக்கல்வித்துறைஅரசாணைஎண்: 258, நாள்: 06.07.2016ல் தெரிவிக்கப்படவில்லை இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் நேரிலும், கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவித்தும் எவ்வித விதித்திருத்தங்களும் வழங்கப்படாத சூழலில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மிகுந்த மன உளச்சலில் குடும்பம் மற்றும் குழந்தைகளை பிரிந்து தொலைதூரத்தில் பணியாற்ற வேண்டிய சூழலில் உள்ளனர்.








