
திருச்சி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அவர்களை நமது பேரியக்கத்தின் மாவட்ட அமைப்பு சார்பாக மாவட்டச் செயலாளர் சே.நீலகண்டன் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்களும் மற்றும் வட்டாரப் பொறுப்பாளர்களும் நேற்றைய தினம் (5.8.16)மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.அப்போது மாவட்ட அமைப்பு சார்பாகக் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசப்பட்டது. மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒளிவுமறைவற்ற வகையில் வெளிப்படையாக நடைபெற வேண்டும்.
காலிப்பணியிடங்கள் விவரம் வெளிப்படையாக ஒட்டப்பட வேண்டும். பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியல் அலுவலகங்களில் ஒட்டப்பட வேண்டும். மேலும் மாவட்ட அளவில் உள்ள கோரிக்கைகளும் பேசப்பட்டது. ம.தொ.க.அலுவலர் அவர்கள் கலந்தாய்வு முறையாக நடைபெறும் என உறுதியளித்தார். மேலும் மா.தொ.க.அலுவலர் அவர்களுக்கும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் மாவட்ட மாநாடு மலர் வழங்கப்பட்டது