தகுதிகாண் பருவம் என்பது,
உங்களை பணியில் நியமனம் செய்த நாளில் தொடங்குகிறது.
இக்காலத்தில்
தற்செயல், வரையறுக்கப்பட்ட விடுப்பு மற்றும் ஈடுசெய் தற்செயல் விடுப்பு ஆகியவற்றை துய்க்கலாம்.
ஈட்டிய
விடுப்பு, அரைச் சம்பள விடுப்பு, மருத்துவ விடுப்பு மற்றும் ஊதியமில்லா
விடுப்பு போன்ற விடுப்புகள் துய்க்கப்பட்டிருப்பின் அத்தனை நாட்கள் தள்ளிப்
போகும்.
இல்லையெனில் சரியாக 2 ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிவடையும்.
அன்னாரது
இரண்டாண்டு பணியில் திருப்தி இல்லையெனில் தங்களது தகுதிகாண் பருவம் மேலும்
6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஆணை வழங்க வேண்டும்.
அவ்வாறு ஆணை வழங்காத பட்சத்தில்
2 ஆண்டுகள் பணியினை முடித்தவர்கள் தகுதிகாண் பருவம் முடித்தவராகக் கருதவேண்டும்.
தகுதிகாண் பருவம் குறித்த அரசாணைகளில் கூறப்பட்டிருப்பது இவ்வளவுதான்.
இதற்கு எதற்கு இத்தனை ......?
தாங்கள் மேலே கூறியிருப்பதற்கு (19 ஆவணங்கள் தேவை என்பதற்கு) ஏதேனும் அரசாணை இருப்பின் தயவுசெய்து பதிவிடவும்.