1. குழந்தைகளின் மூளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறலுக்கு உட்படும். எனவே வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ அந்த நேரத்தில் அனுமதிக்காதீர்கள்.
2. குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கும்போது ஒரு பாடத்துக்கு இவ்வளவு நேரம் என்று அலாரம் வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள், சரியாகவும் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டால் சின்ன பரிசு ஒன்றைத் தந்து பாராட்டலாம். ஒரு வாரம் முழுக்க நேரத்துக்குள் முடித்துவிட்டால், பெரிய பரிசு அல்லது வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இது அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதோடு நேர மேலாண்மை பழக்கத்தையும் ஏற்படுத்தும்.








