TNPPGTA மாநில தலைவர் பொன்.செல்வராஜ் அவர்கள் மாநில நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு அனைத்து ஆசிரியர் சங்க நிவாகிகளும் கலந்து கொண்ட மிக பிரமாண்ட பாராட்டு விழா !!!
TNPGTA மாநில தலைவர் திரு.பொன் செலவராஜ் அவர்கள் (அரசு மேல்நிலைப் பள்ளி குதிரைச்சந்தல் விழுப்புரம் மாவட்டம் முதுகலை வேதியியல் ஆசிரியர்)அவர்கள் இந்த ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு கள்ளக்குறிச்சி KCS திருமண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உதயசூரியன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.ஆசிரியர் திரு.பொன்.செலவராஜ் அவர்கள் ஆசிரியர் பணி மட்டும் அல்லாது ஆசிரியர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் சிறந்த மாநிலத்தலைவர் ஆவார். இவ்விழாவில் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 100 % தேர்ச்சி வழங்கிய முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இது போன்ற நிகழ்வின் வாயிலாக கண்டிப்பாக ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.இவர் தேசிய நல்லாசிரியர் விருதினை பெற கல்விக்குரல் மனதார வாழ்த்துகிறது.