கிராம மாணவர்கள் எண்ணிக்கை 13 லட்சம் ஆக உயர்வு:
அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், தேர்ச்சி
விகிதம் அதிகரிப்பது தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான
கருத்தாய்வு கூட்டம், வேலுார் வி.ஐ.டி., பல்கலை வளாகத்தில் நடந்தது.
இதில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது: கடந்த ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொண்ட, கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை, 10 லட்சம். தற்போது, இந்த எண்ணிக்கை, 13 லட்சமாக உயர்ந்துள்ளது.
அரசு
பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிக்க, பல்வேறு சலுகைகளை அரசு வழங்குகிறது.
ஆனால் பள்ளிகளில், ஒரு மாணவர், இரண்டு மாணவர் என, குறைவாக இருப்பதால்,
ஆசிரியர்கள் பாடம் நடத்தாமல் இருக்கக் கூடாது. துாத்துக்குடி
மாவட்டத்தில், ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்த ஒரு அரசு பள்ளியில், கணினி
மூலம் பாடம் நடத்தியதால், தற்போது, 20க்கும் அதிகமாக, மாணவர் எண்ணிக்கை
உயர்ந்துள்ளது.இதில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது: கடந்த ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொண்ட, கிராமப்புற மாணவர்கள் எண்ணிக்கை, 10 லட்சம். தற்போது, இந்த எண்ணிக்கை, 13 லட்சமாக உயர்ந்துள்ளது.
தரமான கல்வியை வழங்குவதன் மூலம் தனியார் பள்ளி மாணவர்களும், அரசு பள்ளிகளை நோக்கி வரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க வேண்டும். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருடன் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.பள்ளிகளில், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில், அடுத்த கல்வி ஆண்டு முதல் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.