போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர்
பிரகாஷ், 28; சரக்கு வாகனம் ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இவர், 31
வினாடிகளில் வாயால் தேங்காய் உரித்து சாதனை படைத்துள்ளார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது: போச்சம்பள்ளி அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று, அங்கிருந்து சரக்கு வாகனத்தில், தேங்காய் லோடு ஏற்றி, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, தேங்காய் மண்டிகளுக்கு எடுத்துச் செல்வது தான், என் வேலை. ஐந்து மாதங்களுக்கு முன், என் நண்பர்கள், வாயால் தேங்காய் உரிக்க வேண்டும் என, போட்டி வைத்தனர். அப்போது, 80 வினாடிகளில் தேங்காயை உரித்து போட்டியில் வெற்றி பெற்றேன். அதன் பின், தினமும், ஐந்து முதல், 10 தேங்காய்களை வாயால் உரித்து வந்தேன். இப்படி ஏற்பட்ட பழக்கத்தால், தற்போது, 31 வினாடிகளில் வாயால் தேங்காய் உரித்து விடுகிறேன். இந்த சாதனையை என்னால் செய்ய முடியும் என, நினைக்கவில்லை. விரைவில், 20 - 25 வினாடிகளில் தேங்காய் உரிக்க முடியும் என, நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்