தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும்,
குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு துறையில், 5,451 காலியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, இன்று
நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட மையங்களில், 15
லட்சம் பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி
வரை நடக்கும் தேர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
● மாணவர்களை தவிர, அவர்களின் உறவினர், பெற்றோர் என, வேறு யாருக்கும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதி இல்லை ● மொபைல்
போன், கணினி சாதனங்கள், 'கால்குலேட்டர், ஸ்மார்ட் நோட் புக்ஸ், ஸ்மார்ட்
வாட்ச்' மற்றும் மோதிரம், கைப்பை உள்ளிட்ட பொருட்கள், தேர்வறையில்
அனுமதிக்கப்படாது.இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.