சித்தராமையா முன் கோஷம் எழுப்பிய நபர் : கன்னட ராஜ்யோத்சவா விழாவில் முதல்வர் சித்தராமையா பேசிக்கொண்டிருந்த போது, நபர் ஒருவர், “கே.பி.எஸ்.சி., தேர்வில் அநியாயம் நடந்துவிட்டது. நியாயம் பெற்றுத்தாருங்கள்,” என, கோஷம் எழுப்பியதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது.பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் நேற்று காலையில், கன்னட ராஜ்யோத்சவா விழா நடந்தது. இதில் பங்கேற்ற சித்தராமையா பேசி கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் எழுந்து நின்று, “கே.பி.எஸ்.சி., தேர்வில் எனக்கு அநியாயம் நேர்ந்து விட்டது; நியாயம் பெற்றுத்தாருங்கள்,” என, கோஷமிட்டார்.அவரை சமாதானப்படுத்திய முதல்வர் சித்தராமையா, “உங்களுக்கு என்ன அநியாயம் நேர்ந்துள்ளது என கூறுங்கள். அதை சரி செய்து, நியாயம் பெற்றுத்தருகிறேன்,” என்றார்.அதற்குள் போலீசார் அங்கு வந்து கோஷமிட்டவரை, கப்பன் பார்க் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்நபர், ஹூன்சூர் தாலுகா கள்ளஹள்ளி கிராமத்தை சேர்ந்த பரசுராம் என்பது தெரிய வந்தது.கடந்த, 1993ல், கே.பி.எஸ்.சி., தேர்வு எழுதினார். வினாத்தாள் வேறு மொழியில் இருந்தது. கன்னடத்தில் பதில் எழுதியதால், தேர்ச்சி பெறவில்லை. அன்று முதல் பரசுராம், போராட்டம் நடத்தியும், தீர்வு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்த கண்டீரவா விளையாட்டு அரங்கில், முதல்வர் உரையை இடைமறித்து, 'நியாயம் வேண்டும்' என பரசுராம் கோஷமிட்டு, மேடை அருகே வந்ததால், நிகழ்ச்சியில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.