இதனால், சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடா புயல் சென்னையிலிருந்து 830 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என்றும், இந்த புயல் நாளை மறுநாள் வேதாண்யம்-புதுச்சேரி இடையில் கடலூரில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், நாளை காலை முதல் சென்னையில் கனமழை மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









