இவற்றில், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவங்கள் பிரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுகிறது.
இதில், இரண்டாம் பருவத் தேர்வான, அரையாண்டு தேர்வு, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இன்று துவங்குகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச., 23 வரை நடக்கிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை மறுநாளும்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச., 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
டிச., 23ல் தேர்வு முடிந்ததும், 24 முதல் ஜன., 1 வரை, விடுமுறை விடப்படுகிறது.








