தூக்கமின்மையை துரத்துவது எப்படி?

பரபரப்பான வாழ்க்கை முறையில் சிக்கி தவிக்கும் மனமும், உடலும்
பாதிப்புக்குள்ளாகும் போது சில அறிகுறிகளை காட்டுகிறது. அதில் ஒன்று தான்
தூக்கமின்மை. இதற்கு உரிய காரணத்தை கண்டறிந்து உடனே சரி செய்யாவிட்டால்
பெரிய பாதிப்புகளுக்கு வழிவகுத்து விடும் என்கிறார் மதுரையை சேர்ந்த மனநல
டாக்டர் செல்வமணி தினகரன். ‘டென்ஷன் காரணமாக எந்த வயதிலும் தூக்கமின்மை
பிரச்னை தாக்குகிறது. தூக்கமே வராமல் இருத்தல், ஆழமான தூக்கமின்றி இடையில்
பலமுறை எழுவது, தூக்கத்தில் இருந்து விழித்த பின் மீண்டும் தூக்கம் வர அதிக
நேரம் பிடித்தல்.. என பலருக்கு நிம்மதியான தூக்கம் என்பது கனவாகி
வருகிறது.