தியேட்டர்களில் தேசிய கீதம் : மாற்று திறனாளிகளுக்கு சலுகை:
'சினிமா தியேட்டர்களில், காட்சி துவங்கும் முன், தேசிய கீதம் இசைக்கப்படும்
போது, மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை' என, சுப்ரீம் கோர்ட்
தெரிவித்து உள்ளது. 'நாடு முழுவதும், சினிமா தியேட்டர்களில், ஒவ்வொரு
காட்சி துவங்குவதற்கு முன், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும்;
அப்போது, பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று, மரியாதை செலுத்த
வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும் போது, திரையில் தேசியக் கொடியை காட்ட
வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த நிலையில்,
தியேட்டர்களில், தேசிய கீதம் ஒளிபரப்ப பிறப்பித்த உத்தரவில், தற்போது சில
மாற்றங்களை சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. 'தியேட்டர்களில், தேசிய கீதம்
பாடும் போது, மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை; கதவுகள்
வெளிப்புறத்தில் பூட்ட தேவையில்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.