இதில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா " மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு மூலமே மட்டுமே நடைபெறும் "என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்து இந்த தேர்வை ஒராண்டுக்கு தள்ளி வைத்தது. இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.








