இன்று நள்ளிரவு முதல், இனி, பழைய, 500 ரூபாய் நோட்டை, எங்கும் பயன்படுத்த முடி யாது. கையில் உள்ள பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், இம்மாதம், 30க்குள் டிபாசிட் செய்யலாம்.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, நவ., 8ல் பிரதமர் மோடி அறிவித்தார்.அதற்குபதிலாக, புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை
இதற்கிடையே,'செல்லாத ரூபாய் நோட்டுகளை, நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்து வது, பெட்ரோல் வாங்குவது உள்ளிட்ட சில சேவைகளுக்கு பயன்படுத்தலாம்' என, அறிவிக்கப்பட்டது.
இந்த நோட்டுகளை பயன்படுத்துவதற்கான காலக்கெடு, அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு, இறு தியாக, டிச., 15 வரை நீட்டிக்கப்பட்டது. மோசடி கள் நடப்பதாக வந்த செய்திகளை அடுத்து, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன் படுத்த முடியாது என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.
செல்லாத, 500 ரூபாய் நோட்டுகளை, குடிநீர், மின்கட்டணங்கள் செலுத்த, மருந்தகங்கள், அலை பேசி, 'ரீசார்ஜ்' செய்ய உள்ளிட்ட சில இடங்க ளில் பயன் படுத்துவதற்கு அனுமதி அளிக்கப் பட்டிருந்தது.
இறுதியாக அரசுக்கான கட்டணங்களை
செலுத்துவது உள்ளிட்ட ஒரு சில சேவை களுக்கு மட்டும், டிச., 15 நள்ளிரவு வரை செல் லாத, பழைய, 500 ரூபாய் நோட்டுகளை பயன் படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.இந்த கெடு, இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், 'இந்த அவகாசம் நீட்டிக்கப் படாது' என, மத்திய நிதியமைச்சகம், நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி, செல்லாத, 500 ரூபாய் நோட்டுகளை இனி, எங்கும் பயன்படுத்த முடியாது.
'கையில் உள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டு களை, இமாதம், 30க்குள், வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்யலாம்' என, மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.








