SBI ஏ டி எம் அட்டையை பாதுகாக்க அதிநவீன வசதி அறிமுகம்

SBI தனது
வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை எளிமைப்படுத்தி
வழங்கிவரும் அதே வேளையில் வாடிக்கையாளர்கள்
தங்கள் பணத்தை பாதுகாப்பாக கையாளவும்
சில வசதிகளை அறிமுகம்
உயர் பண மதிப்பிழப்பு அறிவிப்பு
வெளியானது முதலே பலர் தங்களது
பண அட்டையை (ATM) வைத்துதான் அன்றாட தேவைகளை பூர்த்தி
செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். பண அட்டைகளை அதிகமாக
பாமர மக்களும் பயன்படுத்த துவங்கியுள்ள வேளையில் சைபர் உலகின் தாக்குதலில்
இருந்து வாடிக்கையாளர்களை காக்க ATM அட்டையை தேவையேற்படும் போது
ON / OFF செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
Android மொபைல்
Play store ல் கிடைக்கும் SBI Quick செயலியின் மூலம் ஏற்கெனவே வங்கி
இருப்பு, சிறு அறிக்கை போன்ற
சேவைகளை மிஸ்டு கால் மற்றும்
குறுந்தகவல் மூலமாக பெற்றுவருகிறோம். கூடுதலாக
தற்போது ATM அட்டையை பணம் எடுக்கும்போதும்,
பொருட்களை வாங்கும்போதும் மொபைலில் ATM அட்டையை ON செய்து பிறகு அட்டையின்
தேவை இல்லாத போது அட்டையை
யாரும் பயன்படுத்தாத வகையில் OFF செய்து வைத்துவிடலாம்.

