நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் முதல் மொழித்தேர்வாக தமிழ் மொழித்தேர்வை எழுதவேண்டும்.
வெளிமாநிலங்கள் அல்லது சி.பி.எஸ்.இ. முறையில் படித்தவர்கள் உரிய கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் மாற்றுச்சான்று வைத்து விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேராமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் ஜனவரி 3-ந் தேதி வரை அறிவியல்செய்முறை பயிற்சி வகுப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.தனித்தேர்வர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும் தேர்வு மையத்தில் தான் தேர்வு எழுதவேண்டும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.








