வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, ஏப்ரலில், ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கு, டிச., 3ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது; நேற்றுடன் பதிவு முடிவதாக இருந்தது.ஆனால், பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்கள் உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஜே.இ.இ., தேர்வு, ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஜன., 16 வரை, இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை, ஜன., 17 வரை செலுத்தலாம்.








