VAIKONDA EKADASI SPECIAL ARTICLE: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


VAIKONDA EKADASI SPECIAL ARTICLE:

சொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல்.  வைகுண்ட ஏகாதசி
மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது
ஏகாதசி எப்படி உருவானது?
சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.
தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது என்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசி” என்று பெயர் சூட்டினார்.
“நீ தோன்றிய இந்த நாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.
ஏகாதசி விரதத்தின் மகிமை
ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால் தன் நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார். அத்துடன் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள் ராஜதண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆணையிட்டார். இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள்.
ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள்.
அரசரால் திண்டாடிய மோகினி
அரசர் ருக்மாங்கதன், தன் நாட்டு மக்களை கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால் துஷ்டமோகினிக்கு வேலை இல்லாமல் போனது. ஆம். யார் ஏகாதசி விரதம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டத்தை தர வேண்டிய துஷ்ட தேவதைக்கு, அரசர் ருக்மாங்கதன் நாட்டில் மட்டும் அதற்கு வேலை இல்லாமல் போனது. காரணம் மக்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை அரசருக்கு பயந்து நிறைவேற்றினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த மோகினி, கடைசியில் விஷ்ணுபகவானிடம் ருக்மாங்கதனை பற்றி புகார் சொன்னாள்.
தன் பக்தனான ருக்மாங்கதன், தன் நாட்டுமக்கள் மேல் அதிக பிரியத்துடன் இருப்பதால் இப்படி செயல்படுகிறான் என்பதை உணர்ந்த ஸ்ரீவிஷ்ணுபகவான், ருக்மாங்கதன் முன் தோன்றி,
“நீ யாரையும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தக்கூடாது. ஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே  விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக நீ யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.”  என்று தன் பக்தனான அரசர் ருக்மாங்கதனுக்கு சொன்னார் ஸ்ரீவிஷ்ணுபகவான்.
இப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை. ஏகாதசி விரதம் யார் இருக்கவில்லையோ அவர்களிடம்தான் துஷ்ட மோகினிக்கு வேலை என்கிறது புராணம்.
நோய்வாய்பட்டவர்கள் விரதத்தை கடைபிடிக்க முடியுமா?
ஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்என்கிறது சாஸ்திரம். ஆனால் வியாதியால் அவதிப்படுபவர்கள் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதல்லவா.? ஆகவே நோய்வாய்பட்டு விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள் ஏகாதசி விரததன்று உணவு சாப்பிடும் முன்னதாக இறைவனை வணங்கிய விட்டு சாப்பிடலாம் எனகிறது சாஸ்திரம்.
ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?
ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, உணவு சாப்பிட்டு  இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், மந்திர ஸ்தோத்திரங்களையும், பாடல்களையும் உச்சரிக்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள்முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும் படிக்க வேண்டும்.
மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகு,  ஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.

விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும். சாப்பிடும் முன் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.
இதனால் புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் முன்னோர்களின் சாபமும் நீங்கிடும்.

சொர்க்கவாசல்  உருவான கதை

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

“பகவானே…தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி  அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.

“எம்பெருமானே…தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

இந்த ஏகாதசி நன்னாளில், “ஓம் நமோ நாராயணாய” என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறுவோம்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H