
தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகளில் இன்றுமுதல் டெபிட், கிரெடிட்
கார்டுகள் ஏற்க முடியாது என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்
அறிவித்துள்ளனர்.
பணப்பரிவர்த்தனைக்கு 1% வரி விதிப்பதற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், வங்கிகளில் இருந்து தாமதமாக பணம்
வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
பரிவர்த்தனை முடிந்து சுமார் 3 நாட்களுக்கு பிறகே பெட்ரோல் பங்க் உரிமையாளர்க்கு பணம் வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த நடைமுறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும்,
பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், கர்நடாக
மாநிலத்திலும் நாளை முதல் பெட்ரோல் பங்க்குகளிலும் கிரெடிட், டெபிட்
கார்டுகள் ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.